பக்கம்:பூ மணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்து : சுடர் விளக்கு ஆளுள்! காலத்தின் மணல் வெளியிலே அடிச் சுவடுகளாக அமைந்துவிடும் சம்பவங்கள், அச்சம்பவங்களின் மாற்றங் கள், மாற்றங்களின் விளைவுகள், விளைவுகளின் விபரீதங்கள் எத்தனே எத்தனையோ! காலத்தின் சுவட்டுக்கு ஈடு கொடுத்தாகும் இயற்கையின் நியதிக்கு ஒவ்வொருவரும் ஆளாகத்தான் வேண்டியிருக்கிறது. இந்நிலைக்கு மல்லிகா மாத்திரம் இலக்காகாமல் விலக்காகிவிடுதல் எங்ங்னம் சாத்தியம்? ஆம்; வாழ்க்கை வரம்பு அப்படி: தலேயணேயில் தலையைப் புதைத்துக் கொண்டு விம்மிக் கொண்டிருந்த மல்லிகாவின் கண்களினின்றும் கண்ணிர் ஆருகப் பெருகிக்கொண்டிருந்தது. கூப்பிடு தொலைவிலிருந்த மதுரைக் கல்லூரியில் குறள் விழா அமர்க்களப்பட்டது. பூலோக சொர்க்கமாக மதுரை அமையுமென்று அவள் கனவுகண்ட அதே மதுரை, இப் போது பாழும் நரகம்போல் தோன்றியது அவளுக்கு. கடந்த சில நாட்களாக மல்லிகாவின் இதயம் பொங்கு மாங்கடலாகக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. உள்ளக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/84&oldid=835644" இலிருந்து மீள்விக்கப்பட்டது