பக்கம்:பூ மணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 கடலிலே சிந்தனை அலைகள் சீறிப் புரண்டன. காற்று இல்லையென்ருல் கடலில் அலே ஏது? அவள் உள்ளம் பொங்கிக் குமுறுவதற்குக் காரணம் ராஜேந்திரனது மன மாற்றமே. அதுவே அவள் உள்ளக்கடல் பொங்குவதற்குக் காற்ருக-அல்ல, சூருவளியாக அமைந்து விட்டது! பழைய நினைவுகள் நெஞ்சில் அரும்புவிட்டன. இளமைப் பிராயத்துப் பசுமை நினைவுகளே அவளால் மறக்க முடியுமா? ராஜேந்திரனிடம் முதல் நட்பு கனிந்த பள்ளி நிகழ்ச்சி ஞாபகம் வந்தது. வளைய வளையச் சுற்றி வந்து அன்புடன் பேசிய அவனது அந்நாளேய உள்ளத்தை ஆராய்ந்தாள். பின் பல ஆண்டுகள் சென்று திரும்பவும் ராஜேந்திரனுக்கும் தனக்குமிடையே படர்ந்த காதலே எண்ணினுள். காதல், கல்யாணத்தில் கொணர்ந்து நிறுத்திய சம்பவமும் கனவு போலிருந்தது அவளுக்கு. ராஜேந்திரனுடன் நடத்தப் போகும் ஆனந்தமயமான . இன்ப நாட்களே எண்ணி எப்படியெல்லாம் அன்று கோட்டை கட்டினுள் அவள்! எதிர்காலம் அவள் முன் வனப்புடன் நர்த்தனம் புரிந்ததே! இப்படி மலே மலேயாக நிர்மாணித்து விட்டிருந்த அவளது ஆசைக் கனவு களெல்லாம் கடைசியில் அதலபாதாளத்தில் அழுந்திப் போய்விட்டனவே! அவள் கனவு பலிக்கவில்லை; எண்ணம் ஈடேறவில்லை; ஆசை நிராசையாகிவிட்டது. எண்ணு வதற்கும் நடப்பதற்கும் வாழ்க்கையில் சிறிதும் தொடர் பற்று விடுகின்றதே, அப்படியென்ருல் ஏனே ஆசைக் கனவுகள் மனித உள்ளத்திலே அலேபாய்ந்து நிழலாட வேண்டும்? பூமா-ராஜேந்திரன் தம்பதிகளின் திருமணப் படம் வந்திருந்த பத்திரிகை அவள் பார்வைக்குக் குறியாக அமைந்து கிடந்தது மேஜைமீது. அவள் அப்பார்வையை விலக்கவில்லே, ஆளுல் நெஞ்சம்தான் எங்கோ சூனிய வெளியிலே அமிழ்ந்து விட்டது. அவளேச் சூழ மயான அமைதி நிலவியது. மயான அமைதியா, அல்லது புயலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/85&oldid=835646" இலிருந்து மீள்விக்கப்பட்டது