பக்கம்:பூ மணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8/} பின் அமைதியா? அந்த அமைதிகூடப் பயங்கரமானது தானே? எந்த அமைதி?... மல்வி ஆா ? கூடத்திலிருந்து தந்தை அழைப்பதறிந்து, மல்லிகா கண்ணிரைத் துடைத்துக்கொண்டு மாடிப்படி இறங்கிள்ை. கீழே கூடத்து முனேயில் மாட்டியிருந்த நிலைக் கண் ணுடியைக் கடந்து செல்கையில் அவள் உருவத்தைப் பிம்ப வடிவில் கண்ணுடியில் கண்ட மல்லிகா நெருப்பைத் தீண்டியவள்போலத் திடுக்கிட்டாள். அம்மைத் தழும்புகள் ஆணிவேரோடு பதிந்து விட்டிருந்த அவள் முகம், அவளுக்கே அருவெதுப்பைத் தந்தது. வெறிபிடித்தவள் போலக் கண்களே இரண்டு கைகளாலும் பொத்திக்கொண் டாள். விரல்களில் கண்ணிர் மிதந்தோடியது. ஒரு காலத்தில்-ஒரு காலத்தில் என்ன, அம்மை பூட்டுவதற்குமுன், மல்லிகா அழகின் சபாமண்டபமாகத் திகழ்ந்தவளே அல்லவா? ஆல்ை அந்த அம்மை மட்டும் வாசாதிருந்திருந்தால்...! மோனத்திலே ஒரு மோகனம் துள்ள-முத்துக்கள் எங்கனும் தத்திட மெள்ள வந்து விட்ட மாரி, மல்லிகாவின் முகத்தில் ஆசைதீர விளையாடி விட்டனளே! கல்யாணத்திற்குச் சில நாட்களே எஞ்சி யிருக்க, அச்சமயம்தான் அ ம் ம னி ன் கேலிக்குக் கிடைத்ததா? என்ன புதிர் இது?... அவளுக்கு அதிர்ஷ்டம்’ என்ற ஒன்று மாத்திரம் இருந் திருந்தால் என்ருே அவள் திருமதி ராஜேந்திரளுகிவிட் டிருப்பாளே! ஆணுல் அதிர்ஷ்டதேவதை யாரையும் ஒரு தரமே வந்தணைவதாகக் கூறுவார்கள்! பின் மல்லிகாவின் கதி? மல்லிகா1?? மறுமுறையும் குரல் கேட்டது. மறுபடியும் முட்டி தின்ற கண்ணிரை விலக்கிவிட்ட வண்ணம் நகர்ந்தாள் அவள் உள்ளே கட்டிலில் படுத்திருந்தார் ராமசாமி. படுத்திருந்தவர், மகள் வந்த குறிப்பை உணர்ந்ததும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/86&oldid=835647" இலிருந்து மீள்விக்கப்பட்டது