பக்கம்:பூ மணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○ 豊 மெல்ல தலேயனேயை இழுத்து அதன் மீது கரங்களைப் பதித்தவாறு, நடுங்கும் கைகளால் புதல்வியின் முகத்தைத் தடவிக் கொடுத்து, 'மல்லிகா, சிநேகிதரொருவர் தபால் எழுதியிருக்கிருச். கோயமுத்துரில் பாங்கியில் வேலேயாக இருக்கிருளும் பையன். என் உயிர் உடலில் ஊசலாடும் போதே உன்னேக் கன்னி கழித்த மணப்பெண்ணுக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறது என் மனம். மல்லிகா, சம்மதம் கூறு. சரி? என்ற சொல்லே உதிர்த்து என் பெற்ற மனதில் பால் வார். அப்போதுதான் உன்னைப் பெற்ற தாயின் ஆவி சாந்தி பெறும்......?? என்று ஒரே முச்சில் கூறிமுடித்தார் அவர். பிள்ளேக்கு மூச்சு வாங்கியது. தனக்குக் கல்யாணம் செய்ய அப்ப ஆசையாயிருக் கிருர் என்பதைத் தன்னுள் நினைத்துப் பார்த்த மல்லிகா வுக்கு ஆச்சரியம் விளேந்தது ; ஆத்திரமும் கூட வளர்ந்தது. 'கல் பானம், எனக்கா இந்த முகத்தை மோகித்து என்னேக் கல்க:ானம் செய்துகொள்ள எந்த இளேஞன், எவர்தாம் முன் வரப்போகிருர்கள்? ராஜேந்திரனே ப் போலத்தானே எல்லா ஆண்களும் இருக்கப் போகிருக்கள் ? அவர்கட்கெல்லாம் உடல் அழகுதான் தேவையா? உட லுக்கும் உள்ளத்துக்கும் அவர்கள் கற்பிக்கும் முரண்பாடு: தான் எப்படிப்பட்டது? உள்ளமும் உருவமும் இரு துருவங் களாகுமா?’ என்று கோர்வையற்றுச் சிந்தித்தது அவள் பெதும்பை மனம். சிந்தனே, முடிவு காணமுடியாத பிரச்சினேயாகி நின்றது. - 'டில்லி கா. ” 'அப்பா, உங்கள் அன்பிற்கு ஈடே இல்லே. ஆனல் ஆண்டவன் நம்மைச் சோதித்துவிட்டானே! என் கல்யாணத்திற்கு இப்போது என்ன அவசரம்? இன்று எனக்குத் தோழி ஒருத்தி தபால் போட்டிருக்கிருள். பட்டணத்தில் அனதை விடுதியில் தொண்டாற்ற என் மனம் நாடுகிறது. அதுவே இப்போதைய என் வேதனேக்கு மருந்து.’’ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/87&oldid=835649" இலிருந்து மீள்விக்கப்பட்டது