பக்கம்:பூ மணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

  • மல்லிகா, என்னேப்பற்றி எனக்கே சந்தேகமாயிருக் கிறது. அதற்குள் என் கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்கமாட்டாயா ? நீ ஒருத்திதானே என் வாழ்வின் லட்சியமாக இருக்கிருப். என் சொல்லுக்குக் கருணை காட்டு, மல்லிகா. உனக்கு ம ன ம கி வி ட் ட ல்

ப்புறம்.....”* ராமசாமி இருமினர். உமிழ்ந்து கொட்டிய எச்சிலில் ரத்தத்துளிகள் கலந்து சிந்தின. மகுே வியாதி அவரைப் படுக்கையில் கிடத்திவிட்டது. மகளைப்பற்றிய கவலே அவரைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. தயாராக வைத்திருந்த ஆஸ்பத்திரி மருந்தைக் குலுக்கிக் கோப்பையில் அளவிட்டு ஊற்றித் தகப்பனிடம் கொடுத் தாள் மல்லிகா , வாங்கிக்குடித்த கோப்பையை மேஜையில் வைத்த பின்னர் மகளே ஊடுருவிப் பார்க்கலாஞர் ராமசாமி. சுடர் விளக்காகத் துடித்தாள் மல்லிகா; அவள் தேம்பினுள்; கதறிள்ை ! அவள் இதயவானில் முடிவானதொரு தீர்மானத்தின் மின்னல் ஒளி கிறுக்கிப் பாய்ந்தது. 'முடிவு !’ அப்பா, உங்கள் எண்ணம்போல நடக்கிறேன். கல்யாணத்துக்கு உடன்படுகிறேன். அங்கு எழுதிவிடுங் கள். கடவுள் விட்டவழி......?? 'மல்லிகா, நிசமாகவா ? ஆகா ; இனி எனக்குக் கவலேயில்லே. நான் சாகமாட்டேன்......?? எ ன் ரு ர் ராமசாமி. உணர்ச்சிப் பெருக்கில் கண் ணிர் சுரந்து கொட்டியது. ராமசாமியின் முகத்தில் அமைதி பூத்தது. மல்லிகா வின் முகத்தில் ஒருவித அமைதியிருந்தது. ஆனல் அந்த முடிவு...... அந்த அமைதி.....! * வானவிசும்பில் மின்னல் கீற்றுகள் வெடித்தன. மின்னல் பின்வரும் மழையின் அடையாளமல்லவா?..... .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/88&oldid=835651" இலிருந்து மீள்விக்கப்பட்டது