பக்கம்:பூ மணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினுென்று : காகித ரோஜா சிறு துாற்றலாக ஆரம்பித்து கடைசியில் பெருமழை பாகப் பெய்தது. இடையிடையே மின்னலும் இடியும் பிணைந்தன. விண்ணேச் சாடி, மண்ணேச் சார்ந்தவாறு இருந்த காற்று சிம்மக்குரல் கொடுத்துப் பயங்கரமாக ஊன் யிட்டுக் கொண்டிருந்தது. மாடியில் கைப்பிடிச் சுவரில் சார்ந்தபடி நின்று கொண் டிருந்த மல்லிகாவின் மனம் குழம்பிக்கிடந்தது. விடிந்த தும் தன்னைப் பெண் பார்க்க: கோயமுத்துரிலிருந்து வந்தால் என்ன செய்வதென்ற சிந்தன. அவளேக் கயிறு கட்டி இறுக்கிவிட்ட மாதிரி இருந்தது. கடந்த சில நாட் களாக அவள் சித்தம் நிலை தடுமாறிக் கிடந்தது. இன்று அவள் போக்கு-தடுமாற்றம் இன்னும் அதிகமான குழப் :பத்தை அடைந்தது. ‘...... மாப்பிள்ளே வந்து பார்த்து என்ன முடிவு சொல்லப் போகிருர்? முடிவு என்ன ? போனதும் கடிதம் போடுவதாக ஒப்பனேக்குச் சொல்லிவிட்டு, அங்கு போனதும் பிடிக்க வில்லை’ என்று ஒரு சொல்லில் நாசுக்காக எழுதிவிடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/89&oldid=835653" இலிருந்து மீள்விக்கப்பட்டது