பக்கம்:பூ மணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 மதுரை ஜங்ஷன நெருங்கிச் சென்று கொண்டிருந்தது. அக்கணம் அவளுக்கு ராஜேந்திரன் நினைவு தட்டவே, ஒ? வென்று அலறிஞள். அழுகை நாவின் மேலண்ணத்தில் ஒட்டிவிட்டது. விம்மல் மட்டும் வெடித்தது. கொதிக்கும் கொப்பரையில் தன்னே யாரோ வேண்டுமென்று திணித்து விட்டு வேடிக்கை பார்ப்பதைப்போல அவள் துடிதுடித் தாள் ; பதைபதைத்தாள். எங்கோ போய்விட்டு வீடு திரும்பிய ராமசாமி கதவைத் தட்டினர். சத்தம் கேட்ட வேகத்தில் படிக் கட்டுகளே ஒரே எட்டில் கடக்க எண்ணிய மல்லிகா சடக்? கென்று பாய்ந்து ஓடினுள். ஒன்று-இரண்டு-மூன்று படிக்கட்டுகளைத் தாண்டியிருப்பாள். அவ்வளவுதான் ! கால் சதங்கையில் சேலேத் தலைப்புச் சிக்கிவிட்டது. அவள் கால்கள் பின்னிவிட்டன. கால் தவறிப் படிகளில் உருண்டு விட்டாள், அப்பா? என்ற கூக்குரலுடன். தலேயினின்றும் ரத்தம் பொங்கி வழிந்தது, ஆற்று மணலேத் தோண்டி விட்டால் கிளம்பும் ஊற்றுப் புனல் கணக்கில். தந்தையைப் பார்த்த அவள் அப்பா’’ என்று அலறிள்ை. r இரவுடன் இரவாக டாக்டரை அழைத்துவந்து காட்டி னர் ராமசாமி. கருவேப்பிலேக் கொழுந்து போன்ற தன் ஒரே செல்வியின் இக்கோலத்தைக் காண அவருக்குச் சஞ்சலம் அணே கடந்தது. நெஞ்சு இருகூருகப் பிளந்து விட்டது. அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. மல்லிகாவின் விஷயத்திலென்று இப்படித் தடங் கல்கள் ஒன்றின்பின்னென்ருகச் சம்பவிப்பதறிந்து அவர் மனம் புழுங்கினர். விடிந்தால் மாப்பிள்ளை வீட்டார்கள் கோயமுத்துரிலிருந்து வந்து குதித்து விடுவார்களே......? என்று எண்ணும்போது அவர் அழுதே விட்டார். வீட்டின் முகப்பு வசத்தில் அவர் கண்கள் ஓடின. ராஜேந்திரனுடன் தன் புதல்வி மல்லிகாவுக்கு நடக்க பூ-6 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/91&oldid=835659" இலிருந்து மீள்விக்கப்பட்டது