பக்கம்:பூ மணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 விருந்த அந்தக் கலியாணத்திற்கென அலங்காரப் பந்தல் இடப்பட்டிருந்தது. அப்படியே சோம்பிப்போய் அப் பொழுது அவருக்குக் காட்சி தந்தது. திருமணத்திற்காக நடந்து முடிந்த முழு ஏற்பாடுகளையும் நினேத்துக்கொண் டார். வெண்ணே திரண்டு வரும்போது தாழி உடைந்த கதை நினைவு வந்தது அவருக்கு. அப்படித்தானே மல்லி காவின் துரதிர்ஷ்டமும் அவளைச் சஞ்சலத்தின் முழுவடி வாகத் திருப்பி விட்டது அவள் பாக்கியம் அவ்வளவு தான்!......நினேக்காத ஒன்று நடந்து விட்டது. எண்ணத் தொலையாத அழகுக் குவியலான அவள், எண்ணவும் முடியாத மெருகிழந்த பதுமையாக-சாயமழிந்து வடுக்கள் பட்ட பொம்மையாக ஆகிவிட்டாள் மல்லிகா......! கண் வரம்பில் வேலி கட்டிக்கிடந்த வெள்ளம் ராமசாமி பிள்ளேயின் உணர்வுக்கு அனேபோட முடியவில்லே. அவர் விழிப்படைந்தார். மல்லிகாவைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் வேருென்றும் பயமில்லே ; இடது முழங்கால் மட்டும் பலமாக அடிபட்டுவிட்டது என்றும்போல் நடமாட இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும்.’’ என்று சொல்லி, ‘இன்செக்ஷன் போட்டு, மருந்தும் எழுதிக் கொடுத்துச் சென்ருர். இரண்டுமணி நேர இடைவேளைக்குப் பிறகு, மல்லிகா லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தாள். துயர்ப்பதிப் பாக இருந்த அவள் தலே உருட்டிவிட்ட கோலிக் குண்டாகச் சுழன்றது ; எண்ணங்கள் சுழன்ருேடின. அந்த முடிவு அவளே நச்சரிக்க ஆரம்பித்தது. அவளுக்கு உடல் சிலிர்க்க, நடுக்கமெடுத்தது. என்ன தோன்றியதோ, மல்லிகா மெல்ல எழுந்து பத்திரமாகத் தலையணையின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப் படத்தை எடுத்துப் பார்க்கலானுள். ஹைஸ்கூலில் அவளும் ராஜேந்திரனும் அந்நாளில் படிக்கும் சமயம் பள்ளிக்கூடத்தில் எடுத்த படம் அது. படத்தில் களங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/92&oldid=835661" இலிருந்து மீள்விக்கப்பட்டது