பக்கம்:பூ மணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 மற்ற சிரித்த முகத்துடன் கைகளேக் கட்டியவாறு நின்று கொண்டிருந்த அவனேயே வைத்தவிழி வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லிகா, அதே நேரத்தில், அவள் அப்படத்தில் தன் உருவத்தையும் கண்டாள். அடுத்த விடிை அவளுக்கு அப்போதைய அவளது முகம் மனத்தில் தோன்றியதோ, என்னவோ, ஐயோ?? என்று அலறிய வளாகப் படத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்து படுக்கையில் விழுந்து புரண்டு அழலாள்ை. 'மல்லிகா, அலட்டிக் கொள்ளாதே, உடம்பு சீர் கெட்டிருக்கிறது?’ என்று விக்கலுக்கும் விம்மலுக்கு மிடையே எச்சரித்தார் பிள்ளே. 'இனி மகளுக்கு ஆபத் தில்லே’ என்ற உறுதி ஏற்படவே, அந்த நம்பிக்கையில் அவர் மெய்மறந்தார். மழை நின்றது ! அடுத்த நாள் பொழுது புலர்ந்ததும், முதல் வேலே யாகத் தபாலாபீசுக்குச் சென்று மல்லிகாவின் விபத்தைக் காரணங்காட்டிக் கோவைக்குத் தந்தி கொடுத்தார் ராமசாமி. அப்போது, இனி மல்லிகாவின் கதி...?? என்று அவர் மனம் கேள்வி கேட்டது. இனி அவள் கதி......! அவர் மனம் மாளாத் துயரம் எய்தியது. ஆளுல் அதற்கு நேர்மாருக மல்லிகாவோ இப்போதைக்கு என்ன இனி மேல் யாரும் பெண் பார்க்க வரமாட்டார்கள்......? என்று வாய்விட்டு மெல்ல மனதிற்குள் கூறியவண்ணமிருந்தாள். அது அவளுக்கு உவகையைக் கொடுத்திருக்க வேண்டும். உடல் வேதனையிலுங் கூட அந்த முடிவின் அமைதி ட்டிலா மனச்சாந்தியை அவளுக்கு நல்கியது. அன்று மாடிப்ப்டிகளிலிருந்து மல்லிகா இறங்குங்கால் விழுந்த சம்பவம் அவளாகவே மனமறிந்த வகையில் ஏற் படுத்திக்கொண்டதென்ற ரகசியத்தைப் பாவம், பிள்ளை எப்படி அறிய முடியும்? எனினும் முகில்வானம் மழை பொழிந்துதானே ஆகவேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/93&oldid=835663" இலிருந்து மீள்விக்கப்பட்டது