பக்கம்:பூ மணம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனரைருை பூலோக சுவர்க்கம் மதுரையில் நல்ல வீடாக வசதியான இடத்தில் கிடைத்ததில் ராஜேந்திரனுக்குப் பூரண திருப்தி. பூமாவுக் கும் வீடு பிடித்திருந்தது. ஸ்டோர்ஸி"ல் ஒரு பகுதி அவர்களுக்கு. பக்கத்துப் பகுதிகளிலும் வேறு சிலர் வாடகைக்கு இருந்தார்கள். ராஜேந்திரன் காலேயில் ஆபீஸ் செல்லுபவன், மாலே வில்தான் வீடு திரும்புவான். இதற்கிடையில் பொழுது, போவது பூமாவுக்குப் பெரிய பாடாகிப் போய்விடும். அந்தச் சமயங்களுக்குப் பக்கத்து வீட்டுப் பெண் அவளுக் குப் பழக்கமானது நிரம்பவும் துணையாயிருந்தது. அவர் கள் வீட்டில் ரேடியோ ஸ்ெட்” இருந்தது. அந்தப் பெண் விஜயா, முக்கிய நிகழ்ச்சிகளே வானெலியில் குறித்து வைத்துக் கொண்டு பூமாவின் அபிப்பிராயங் கேட்டு ரேடியோவைத் திருப்புவாள். பூமாவிற்கு நாடகங்கள் என்ருல் மிகவும் ஆசை. நாடகங்களேக் கேட்பாள். பின் அவை அவள் விமர்சனத். துக்குக் காத்திருக்கும். ஏனெனில் பள்ளிக்கூட நாட்களில் ங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/94&oldid=835665" இலிருந்து மீள்விக்கப்பட்டது