பக்கம்:பூ மணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 பூமா கதாநாயகியாகப் பலமுறை நடித்துப் புகழ் பெற்ற வள். நடிப்பிற்கு ரேடியோவில் சந்தர்ப்பம் இல்லே யென்ருலும், வசனங்களைச் சமயமறிந்து உணர்ச்சி பாவத் துடன் பேசுவதற்கும் எவ்வளவோ திறமை வேனும்’ என்பாள் பூமா. - விஜயாவுக்குக் கல்யாணம் இன்னும் ஆகவில்லை. வீட்டு வேலைகள் அவள் பொறுப்பு ; எஞ்சும் நேரங்களில் பூமாவுடன்தான் இருப்பாள் அவள். விஜயாவின் குடும்பம் அப்படி ஒன்றும் பெரியதல்ல. அவள்-தாய்-தந்தை மூவர்தாம். தந்தைக்குப் பாங்கில் காஷியர் உத்தி யோகம். சங்க காலத்துத் தலைவி-தோழியரைப் போலப் பூமன் வும் விஜயாவும் நட்புரிமை பூண்டு அன்பு பாராட்டி வந்தார்கள். ஒருநாள்......! இயற்கை அந்தி வானத்தில் கண்கட்டு வித்தை செய்து கண்ணுமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது, பிரமன் உலகத்தை உண்டாக்கி அத்துடன் விந்தை மனிதர்களையும் படைத்து, மாயச்சிரிப்பை இழையோடச் செய்வதுபோல. . அழகின் சிரிப்பை ரசித்தவாறு பூமா திண்ணையில் உட்கார்ந்திருக்க, அவளருகில் துணில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்த விஜயாவும் அக்காட்சியை அனுபவிக்க தலைப் பட்டாள். பொன்வண்ணக் கதிர்கள் அவர்கள்மீது இழை பின்னியிருந்தன. அந்தி ஒளியில் அழகுடன் விளங்கிய இருவரும் ஒருவர் அழகை இன்னுெருவர் ரசித்துக்கொண் டார்கள். . அக்கா, மணி ஐந்து, உன் கணவர் வரும் தேரம் ஆய்விட்டதே என்று சொல்லி நிறுத்தியதுதான் தாமதம், பூட்ஸ் சத்தம் முன் அறிவிப்புச் சொல்ல, வந்து நின்ற ராஜேந்திரன் யந்திரத்தினுல் இயங்குபவன்போலப் பின் திரும்பின்ை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/95&oldid=835667" இலிருந்து மீள்விக்கப்பட்டது