பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

போலவே, அதன் பொருளடக்கங்கள் எல்லாம் நைந்து கிழித்து போய், அதன் எழுத்துக்களும் மெருகும் கீலகமாகிக் கிடப்பதைப் போல இங்கே கிடக்கிறது, - புழுக்களுக்கு உணவாக! ஆனால், உழைப்பு என்றுமே அழிந்துபோகாது: ஏனென்றால் அது மறுபடியும் ஒரு நூலாசிரியனால் திருத்தி எழுதப்பட்டு, இன்னும் அழகான புதிய புதிய பதிப்பாக வெளிவரும் என்பது எனது நம்பிக்கை” என்று தனது கல்லறையிலே எழுதுமாறு கூறி மறைந்தார்.

——————————

பெஞ்சமின் ஃபிராங்ளின் வாழ்ந்தபோது மக்களை மேம்படுத்தும் எண்ணங்களை எல்லாம் அவரது நூற்களிலே பேசிய உரையாடல்களிலே தனது அனுபவங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்த பிறகாவது நம்மை நாம் வாழ்க்கையிலே மேம்படுத்திக் கொள்வோமாக.

◯ தன்னடக்கமாக இரு. அதிக உணவை உண்டு மந்தமாக வாழாதே! போதைவெறி ஏறும்படி மதுபானத்தைக் குடிக்காதே,

◯ உனக்கோ, பிறருக்கோ நன்மை தரும் என்றால் ஒழிய அதிகமாகப் பேசாதே! அற்பமான வார்த்தைகளை அலசி அலசி ஆத்திரப்பட்டு உளராதே!

◯ எதையும் ஒழுங்குபடுத்து. எந்தப் பொருளையும் அவற்றிற்குரிய இடங்களிலே வைத்து பாதுகாத்துக்கொள். அதனதன் தேவை நேரும்போது கையாண்டுகொள்.

◯ காலத்தை வீணாக்காதே! போனால் திரும்பி வராது; உனக்குப் பயன்படுவதிலேயே உனது நேரத்தைச் செலவழி; அனாவசியமான செயல்களை அகற்றிவிடு.

◯ பொருளைக் காப்பாற்று! கண்டபடி அதை செலவழிக்காதே! உனக்கோ, மற்றவர்களுக்கே நன்மை தரு