107
கிளப் என்று பெயர் கொண்ட அந்த நான்கு வகை யான அமைப்புகள் எப்படி உண்டாயின, யார்தான் அந்த வடிவம் கொடுத்தது என்பன போன்ற கேள்விகள் இன்னும் விளக்கமில்லாத வினாவாகவே வளைந்து கிடக்கின்றன.
நால் வகை சேனைகள்
சீனநாட்டிலே சேனைகளை படைமுகத்திற்கு நடத்திச் செல்வதற்காக சீட்டாட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது என்ற கருத்தினை நாம் முதலிலே கூறியிருந்தது உங்களது நினைவுக்கு இப் பொழுது வரலாம். நால்வகை சேனைகளான ரத, கஜ, துரக, பதாதிகள் என்பனவற்றை அடிப் படையாகக் கொண்டு இந்த நால்வகைப் பிரிவு நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கலாம் என்ற நமது ஐயம் நிஜமாகவும் கூட இருக்கலாம்.
ஆனால், இனி நாம் காணப் போகின்ற விளக் கங்கள், இந்த நான்கு வகைப் பிரிவுகளைக் கட்டி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தினாலும் ஆழ்த்தலாம். மாறாக. வியப்பில் வீழ்த்தினாலும் வீழ்த்தலாம். அதற்கு ஆயத்தமாகிக் கொண்டு, நாம் கதைப் பயணத்தைத் தொடர்வோம்.
இயற்கையே முன் மாதிரி
ஆதித்தாயாக அமைந்து அனைத்தையும் தரு பவள், அனைத்து மகிழ்விப்பவள் இயற்கை
பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/109
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
