பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

3. டைமண்ட் சீட்டின் ராஜா, ராணி, ஜேக். டைமண்ட் ராஜா : உலகப் புகழ்பெற்ற சக்ரவர்த்தி ஜூலியஸ் சீசரின் படம்தான் ராஜாவாக ஆனது. இதற்கு யாரிடமிருந்தும் எந்தவிதமான எதிர்ப்பும் வரவில்லை. எனவே மாற்றமும் இல்லை. முதலும் முடிவுமாக சீசரின் படமே சித்தரிக்கப்பட்டு விட்டது.

டைமண்ட் ராணி : ஆரம்ப நாட்களில், மனிதப் பிறவியை யாரும் தீட்டாமல், கிரேக்கப் புராணத்தில் வரும் அமேசான் நாட்டு ராணியான மெந்திசிலியா என்பவளின் கற்பனை உருவத்தைப் போட்டு வைத்தனர்.

ஆனால், அதுவும் நிலைக்கவில்லை, பைபிளில் புகழ்பெற்றப் பெண்ணாகத் திகழும் ராக்கேல் என்பவளின் படமே இறுதியாக்கப்பட்டிருக்கிறது.

டைமண்ட் ஜேக் : முதலில், ஹார்ட் சீட்டின் ராஜா வாகிய சார்லிமேகனின் மருமகனாகிய ரோலண்ட் என்பவரின் படம் இடம் பெற்று வந்தது. பிறகு, ஹெக்டர் டிமாரிஸ் என்பவரின் படம் இறுதியாக்கப்பட்டு வைக்கப்பட்டது.

4. கிளப்பின் சீட்டின் ராஜா, ராணி, ஜேக்

கிளப் ராஜா: எந்த எதிர்ப்பும் இல்லாமல், முதலும் இறுதியுமாக இடம்பெற்ற மன்னராக மகா அலெக்சாந்தர் விளங்குகிறார்.