பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


| 26 சீட்டாட்டத்தின் பெருமையையும் அருமை யையும் ஐயமறப் புரிந்துகொண்ட இராணி எலிசபெத்... தன் உள் ளத்திலிருந்து உணர்ச்சிப் பெருக்காக இப்படிக் கூறினாள் சீட்டாட்டத்தைப் பற்றி, "இது பிரச்சினைகளிலிருந்து மனதைத் திசை திருப்பி ஒரு ஆனந்தமான சூழ்நிலையையும் இனிய உணர்வினையும் அளிக்கிறது” என்பதுதான், இது. போதாதா இராணியின் அன்பைப்பெற. பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்திபெற்ற சீட்டாட்டத்திற்கு நிறைய பிரச்சினைகள் இருக் கின்றன என்பதை எலிசபெத் ராணி உணர்ந்தாள். இத்தனைச் சீட்டுக்கள் தான் ஒரு கட்டிலே இருக்க வேண்டும் என்று குறிப்பில்லாமல், குழப்பம் தருகின்ற சீட்டுக்களின் எண்ணிக்கை தரும் பிரச்சனை, இப்படித்தான் ஆட்டத்தை ஆட வேண்டும் என்று விதிமுறைகள் இல்லாத வேலியற்ற பிரச்சனை. இப்படித்தான் இதனை அழைப்பது என்று பெயரில்லாத பிரச்சினை....யார் யார் படங்களோ சீட்டுக்களில் இருக்கின்றனவே, அவற்றில் யார் படத்தை வைப்பது என்கிற படப் பிரச்சினை... ராணி எலிசபெத் தன் ஆட்சிக்காலம் மட்டு மல்ல, தன் ஆயுள் காலம் முழுவதும் சீட்டாட்டத் தின் சீர்மைக்கு செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந் தாள். எண்ணிக்கைக்குழப்பமான சீட்டுக்களை 52 சீட்டுக்கள் கொண்டதுதான் ஒரு கட்டு என்று திருத்தியமைத்தாள்.