பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

களுக்கு ஒரு முறை நடைபெற்றன. ஆண்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்ற காலத்தில் இல்லாமல், தனியாக நடத்தப்பட்ட அந்தப் போட்டிகளுக்கு ஹிரா என்பது பெயராகும். அந்தப் போட்டிகளைப் பார்க்க ஆண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தன. இந்தப் போட்டிகளை ஆரம்பித்து வைத்தவள் என்ற பெருமைக்கு உரியவள். ஹிப்போடோமியா எனும் இளவரசியாகும்

அவள் தன் திருமணம் பிலாப்ஸ் என்ற இளைஞனுடன் நடந்த நிகழ்ச்சியை விமரிசையாகக் கொண்டாடவும் நினைவுபடுத்தி மகிழ்வதற்காகவும், இந்தப் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாள் என்று வரலாறு கூறுகிறது.

இந்தப் பெரினிஸ் நடத்திய புரட்சிநிகழ்ச்சிக்குப் பிறகு, எப்பொழுது பெண்களை போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள் என்பதற்குரிய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் 128வது ஒலிம்பிக் பந்தயங்களின் போது பெலிச்சி என்ற வீரமங்கை, தேர் ஒட்டும் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாள் என்ற குறிப்பு மட்டும் நமக்குக் கிடைக்கிறது. ஆகவே பெண்கள் போராடித் தங்கள் உரிமையைப் பெற்று நிலை நிறுத்திக் கொண்டார்கள் என்ற நினைவுடன் நாம் மேலே தொடர்வோம்.