பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17 கிரேக்க நாடு ரோம் நாட்டுக்கு அடிமையான வுடன், கீர்த்திமிக்கப் பந்தயங்கள் மதிப்பிழக்கத் தொடங்கின. பந்தயங்களின்போது கிரேக்கருக்கும் ரோமானியர்களுக்கும் இடையே நடைபெற்ற குழப்பங்கள், கொடுமைகள் அனைத்தையும் கண்ட அப்பொழுது ஆண்ட ரோம் சக்கரவர்த்தி முதலாம் தியோட சிஸ், ஒலிம்பிக் பந்தயங்களே இனி நடக்க கூடாது என்று ஆணைபிறப்பித்து தடை செய்து. விட்டான். கி. பி. 894ல் தான் இந்த தடை. பிறந்தது. 292 முறை நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்கள் உருத் தெரியாமல் ஒழிக்கப்பட்ட பிறகு, விளை யாட்டுப் பந்தயங்கள் பற்றிய குறிப்புக்கள், அவ்வளவு சிறப்பாக எழுதப்படவில்லை. அங்கும் இங்கும் ஒன்று இரண்டு என்ற அளவிலே உலக நாடுகளில் தென்பட்டும் விளையாட்டுக்கள் திறமில்: லாமல் நடைபெற்றும் வந்தன. ஆனால், பெண்களும் விளையாட்டுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்கிற ரீதியிலே அவ்வப் போது வீரப் பெண்மணிகள் பலர் முன் வந்து, தங்கள் திறமையை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, பிற்காலத்தில் பெண்கள் விளையாட்டுக்களில் ஆர்வமுடன் பங்கு பெறுவதற்கான ஆயத்தப் பணி களை மிகவும் அருமையாகச் செய்து தந்திருக் கின்றார்கள்.