பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


அன்றே அணிந்து கொண்டு நீந்த ஆரம்பித்தாள். ஊராரின் ஏச்சுப் பேச்சுக்கள் அவளை நிறுத்த முடியவில்லை. அன்று அவள் ஏற்படுத்திய புரட்சிகரமான நீச்சல் உடைதான். இன்றும் கொடி கட்டிப் பறக்கிறது. கவர்ச்சியை அந்த நாளிலே காட்டிப்போன பெண்ணின் பெயர் ஆனட் கெல்லர்மேன்.

இப்படியாக ஆங்காங்கே ஒரு சில பெண் வீராங்கனைகள் உணர்ச்சி பூர்வமாக வெளி வந்து பெண்கள் விளையாட்டுக்கு எழுச்சி தந்தாலும், அதனால் எந்த விதமான பயனும் உண்டாகாமல் போனது ஆச்சரியமான சேதி தான்.

1896ம் ஆண்டு புதிய ஒலிம்பிக் பந்தயம், பிறந்தது கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரில். முதல் பந்தயம் தொடங்கியது. ஆனால் அதில் பெண்களுக்கான போட்டிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. பார்வையாளராகத் தான் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்களே தவிர, பங்கு பெறும் வாய்ப்பினைப் பெறவில்லை.

1896, 1900, 1904, 1908 ஆகிய நான்கு ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்து முடிந்த பிறகு, பெண்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் பல பக்கங்களிலும் இருந்து பாய்ந்து வந்த பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு அது இல்லாமல் போனது விந்தை தான்.