பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. ஆண் பெண் உடல் அமைப்பு


பெண்கள் விளையாடுவது பெருந் தவறு என்று குற்றம் சாட்டுபவர்கள் கூறும் காரணங்களில் முதலாவதாக வருவது அவர்களின் உடல் அமைப்பு தான்.

பெண்களின் உடல் அமைப்பு மென்மையானது, மிகவும் தன்மையானது, விளையாட்டுக்கள் கோருகின்ற வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாதது என்றெல்லாம் சுட்டிக் காட்டுவார்கள். அதனால், நாம் முதலில் பெண்கள் உடலமைப்பு, ஆண்கள் உடலமைப்பு எப்படி அமைந்துள்ளன என்று புரிந்து கொண்டால், அவர்கள் விடுக்கும் வினாக்களுக்கு விடையளிப்பது விவேகமாகவும் எளிதாகவும் ஆகிவிடும்.

அமைப்பு

ஆண் பெண் இருவருக்கும் உடலமைப்பு பொதுவாக ஒரே மாதிரி தான் அமைந்துள்ளது. ஆனால் அவயங்களில் ஒரு சில வேறுபாடு.