பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


29 பெண்களின் தொடைப்பகுதி எலும்பு பெல்விஸ் என்ற பகுதியுடன் இணைந்திருப்பதே ஒரு மாதிரித் தன்மையில் இருப்பதால் தான் அவர்கள் இயக்கமே சற்று நளினத் தன்மையுடன் அமைந்திருக்கிறது. சமநிலை தரும் புவிஈர்ப்புத்தானம் (Centre of Gravity) ஆண்களைவிட பெண்களுக்கு சற்றுத் தாழ்வாகவே அமைந்திருப்பதும் ஒரு பலவீனமாகும். ஆண்களின் கைகள் (முன் கை மற்றும் புஜங்கள்) நீண்டும் வலிமையுடையதாக இருக் கின்றன. முத்தலைத் தசைப் பகுதி உண்டு. பெண் களுக்கு இருதலைத் தசையுடன் குட்டையாகவும் மென்மையாகவும் உள்ளன. அதனால்தான் மூங்கிலைப் போல கைகள் என்று பெண்களை வருணிக்கின்றர்கள். வலிமை அதிகம் இல்லாத முழங்கால்மூட்டு, பெண்களுக்கு உண்டு. அதிக உயரம்.அதிக எடை கொண்டவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள். பெண்களுக்குரிய உடல் அமைப்பானது அடிக்கடி விளையாட்டுக்களில் விபத்துக்கள் ஏற்படும் வண்ணம் அமைந்திருக்கின்றன என்றும் ஒரு சிலர் கூறுகின்றார்கள். அதாவது அவர்களின் ஓடும் வேகத்தைத் தாங்க, உடல் எடையைத் தாங்க