பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

யாசம் இருக்கத் தான் இருக்கின்றன. அதாவது சிறிது சிரமப்பட்டுத்தான் ஓட வேண்டியிருக்கிறது இடுப்பெலும்பு பகுதியுடன், தொடை எலும்பானது இணைகிற விதமானது ஒரு விதமான கோண அமைப்பில் பொருந்தியிருப்பதானது, ஒட்டத்திற்கு ஏதுவில்லாத தன்மையாக இருக்கிறது. இந்த அமைப்பானது, பெண்கள் ஒடுகிற நேரத்தில், உட்புறமாக தொடை எலும்புப் பொருந்தியிருப்பதன் காரணமாக குதிகாலை வெளிப்புறமாகக் கொண்டு வருவது போன்ற அமைப்புடன் தான் ஓடவேண்டியிருக்கிறது. ஒடுகிற நேரத்திலும், முழங்கால்களை வேண்டிய அளவுக்கு உயர்ந்த இயலாமையும் ஏற்படுகிறது. தொடை எலும்பும் இடுப்பெலும் பின் பகுதியில் இணைந்திருக்கும் தன்மையானது. தொடைஎலும்பு உட்புறமாகவே சுழல்வது போல இருப்பதானது, பெண்களின் ஓட்டத்திற்கு சாதக மில்லாத சூழ்நிலையை உண்டாக்குகிறது என்று வல்லுநர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

தாண்டலும் பெண்களும்

ஆண்களின் உடல் அமைப்பானது புவிஈர்ப்புத் தானம் சரியாக விழுகின்ற தன்மையில் அமைந்திருக்கிறது. பெண்களின் உடலானது சற்றுக் குறைந்த புவிஈர்ப்புத்தானம் கொண்டதாக விளங்குகிறது. அதாவது 1%-2% என்பதாக அதனால் நிலையான தன்மையுடன் (STABLE) பலவீனம் உள்ளதாகவும் விளங்குகிறது. அத்துடன் கைகளும்