பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- * * F-off ジど கலையுலகத்தில் அவர்கள் கைபடாத இடம் இல்லை. அரசியலில் அவர்கள் வசிக்காத அங்கம் இல்லை. இலக்கியத்தில் அவர்கள் எழுச்சி எப்பொழுதும் இருந்து கொண்டே வருகிறது. அறிவியல் உலகிலோ அவர்கள் அற்புத ஜீவிதங் களாய் அதிரச காவியங்களாய் திகழ்ந்து கொண்டு தான் வருகின்றார்கள். நுண்ணனுக்களைக் கையாளும் இயல்களில் கூட அவர்கள் ஆண் களையும் மிஞ்சி விட்டிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் உடல் வலிமையைக் காட்டி உச்சத் திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டுக்களிலும், ஆணுக்கு நிகர் பெண்கள் என்ற வாசகத்தைப் பேசியும் செயலில் காட்டியும் வருகின்றார்கள். அவர்கள் கலந்து கொள்ளாத விளையாட்டுக்களே இல்லை என்னும் அளவில், பெண்கள் விளையாட்டு உலகனை முற்றுகையிட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். எடை தூக்குவதில் மட்டுமே, அல்லது வலிமை யும் பலமும் நிறைந்த போட்டிகளில் மட்டுமே ஆண்களுடன் பெண்கள் போட முடியவில்லை. ஆனால், விளையாட்டுப் போட்டிகளில் மற்றும் நெஞ்சுரம் (Stamina) அதிகம் தேவைப்படுகின்ற, போட்டிகளில் பெண்கள் மிகவும் திறமையுடனே ஈடுபட்டு வெற்றி பெற முடியும் என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.