பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9. ஆண்கள் பின்வாங்கும் சாதனைகள் == mor பெண்களுக்கு எனத் தனியே 16 போட்டிகள் ஒலிம்பிக் பந்தயங்களில் இணைக்கப்பட்டிருக் கின்றன என்றாலும், ஆண்கள் போட்டியிடும் துப்பாக்கிச் சுடுதல் போன்ற மூன்று போட்டிகளில் சேர்ந்து கொண்டு போட்டியிடலாம் என்றும் ஒரு முறையும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், பெண்களின் முன்னேற்றத்தில எத்தகைய புரட்சி ஏற்பட்டிருக்கிறது. பார்த்தீர்களா? மென்மையானவர்கள் மங்கையர்கள், பலவீன மான பிரிவினராவார்கள் பெண்கள் என்னும் கொள்கை,பழைய பஞ்சாங்கமாக, வறட்டு வேதாந்த மாக அல்லவா மாறிப் போய் விட்டது. மலர் போன்ற மென்மையானவர்கள் என்பதை விட, முரட்டுத்தனமான மென்மையும், விடாப்பிடி பிடியுடன் விளங்கும் வன்மையும் உடையவர்கள்