பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 சந்தன மேனியிலே, கனமான போருடைகளை அணிந்து கொண்டு, அந்த நாட்டுப் பெரும் வீரர் களுடன் போரிட்டு, பெரும் வெற்றி பெற்றதை உலகமே வியந்து போற்றிய வீர நிகழ்ச்சிகளாகும். சர்க்கஸ் நிகழ்ச்சிகள் என்றாலே. வந்திருக்கும் பார்வையாளர்கள் வாய்பிளந்தவாறு பார்த்துக் கொண்டிருக்கும் சாகச நிகழ்ச்சிகள் பல இருக்கும் என்பது நாம் அறிந்தது தானே. அதில், அழகழ கான பெண்கள் ஆடுவதும், ஒடுவதும், தாண்டு வதும், கயிற்றில் நடப்பதும், கம்பு பிடித்துத் தாவுவதும் காணக் கண் கொள்ளாக் காட்சிகள் தான். s ஆண்கள் தாம் பெரிய எடைகளைத் தூக்கிக் காட்டி, பார்வையாளர்களின் கைதட்டல்களைப் பெறுவார்கள். மேரி லூர்ட்ஸ், கரோலின் பாமனே, பெல்லா ஜினா என்பவர்கள் சகோதரிகள். அவர்கள் மூவரும் ஆண்களுக்கு இணையாக எடைதூக்கிக் காட்டி 18ம் நூற்றாண்டில் பெரிய சாதனையையே புரிந்திருக்கின்றார்கள். ஆண்கள் செய்வதற்கு மேலே என்னாலும் செய்ய முடியும் என்று மார்தட்டி பேர் தட்டிக் கொண்டு போன பெண்ணொருத்தி, பிரேக் நாட்டில் 1895ம் ஆண்டு ஒரு சாதனை புரிந்தாள். அவள் ஒரு குதிரை லாடத்தைக் கொண்டுவரச் செய்து, கையினாலே அதனை வளைத்துக் காண்