பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


71 கள். வலிமையுள்ள ஜிப்சி ஹோல்டன் என்பவள், சற்று ஆற்றல் குறைந்த டேனி டுலஸ் என்பவளை முகத்திலும், உதட்டிலும் கண்களிலும் மாறி மாறிக் குத்தி, அதாவது இரத்தம் வரும் வரை குத்திக் கொணடிருக்கிறாள் அந்தக் கோரக் காட்சியை குளோசப்பில் காட்டு கிறார் டீவி காமராமேன். அந்த காட்சியை மக்கள் கண்டு மகிழ்கின்றார்கள் இப்படி ஒரு போட்டி. அழகு உருவங்களாக மேடைகளில் அலங்காரம் செய்து அன்ன நடை நடந்து அனைவரையும் மகிழ் வித்த பெண்கள் தாம் இன்று ஆண்கள் கலந்து கொண்டு போட்டியிடும் அத்தனை நிகழ்ச்சி களிலும் விடாப்பிடியாக நுழைந்து கொண்டு விளையாடிக் காட்டுகிறார்கள். வேடிக்கை ஊட்டு கிறார்கள். வியப்பில் ஆழ்த்துகிறார்கள். வெற்றியும் விளைவிக்கின்றார்கள். அப்படியென்றால் பெண்கள் அத்தனை விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற்றால், அவர்களுக்கு ஒன்றும் ஆகாதா? ஏதாவது நடந்து விடாதா? என்று கேட்பவர்கள் இன்னும் இருக் கின்றார்கள். ஏதாவது நடக்குமா அல்லது நடக் காதா?