பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82 ஆண்கள் பெண்கள் சாதனைகளை நாம் ஆராயும்பொழுது ஆண்களின் சாதனை வேகத்தைவிட, பெண்களின் சாதனை வேகம் அசுரத்தனமாக இருக்கிறது என்பதையே அறிய முடிகிறது. பல போட்டி நிகழ்ச்சிகளில் கடந்த முப்பது ஆண்டுகால சாதனைகள், பெண்கள் விளை யாட்டுப் போட்டிகளில் வேகமான முன்னேற்றத் தைப் பெற்றிருக்கின்றார்கள். அத்துடன் நில்லாமல், ஆண்களின் சாதனைகளையும் மிஞ்சியும் இருக் கின்றார்கள். நீண்ட துார ஓட்டம், நீச்சல் போட்டிகள், மலையேற்றம், குதிரையேற்றம், படகோட்டும் போட்டிகள், மோட்டார் படகு ஒட்டும் போட்டிகள், பாராசூட்டுடன் வானத்திலிருந்து குதித்தல், மோட்டார் கார் ஒட்டுதல், இந்தப் போட்டிகளில் எலலாம், பெண்கள் ஆண்களை மிஞ்சும் வீராங் கனைகளாகவே விளங்குகின்றனர். இந்த இணையற்ற சாதனைகளின் அடிப் படைத் தன்மையை ஆராய்ச்சி செய்த வல்லுநர்கள் ஒரு கருத்தை உன்னிப்பாக விளக்கிக் காட்டு கின்றார்கள். அதாவது, பெண்களின் உடல் அமைப்போ, அல்லது மருத்துவ முறைக் குறிப்போ எதுவும் பெண்களை, ஆவிளையாட்டுக்களிலிருந்து வேறு