பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12. நன்மை என்பதே உண்மை ஆண்களும் பெண்களும் தோற்றத்தில் வித்தி யாசமாக இருக்கின்றார்கள். எடையிலும் உடல் அமைப்பிலும் சற்று மாற்றமாக விளங்குகின்றார்கள். என்றாலும், ஆண்பெண் திறமையில் அனைவரும் ஒன்றாகவே உலா வருகின்றார்கள். பெண்கள் உடலில் உள்ள கொழுப்புச்சத்து குறைக்கப்பட்டால், அதாவது குறைத்து விட்டால், ஆண் பெண் திறமையில் உள்ள இடைவெளி மறைந்தே விடும் என்றே ஆராய்ச்சி வல்லுநர்கள் அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றார்கள். இதற்காக ஓர் உதாரணத்தைக் காட்டுவார்கள் வல்லுநர்கள் பெண்கள் நிகழ்த்துகின்ற உலக சாதனை எல்லா ஒட்டப் பந்தயங்களிலும் வெகு வேகமாக இருக்கின்றன. அடிக்கடி மாற்றி எழுதப் படும் பெண்களின் சாதனைப் பட்டியல், முன்பு ஆண்களின் சாதனைப் பட்டியல் ஆமை வேகத் திலே இருப்பதையும் நம்மால் காண முடிகிறது.