பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13. பெண்கள் ஆண்களைவிட அதிக நாள் வாழ்வது ஏன்? பொதுவாக ஆண்களைவிடப் பெண்கள் சராசரி 3.6 ஆண்டுகள் அதிக காலம் உயிர் வாழ்வ தாக உலகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்த வயது வித்தியாசம் இன்னும் அதிகம். (இது சராசரிக் கணக்கு) இதற்கான காரணங்களை மாஸ்கோ “வளர்ச்சி உயிரியல் ஆராய்ச்சி நிலைய’ நிபுணர் ஒருவர் விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் வருமாறு : சூழ்நிலைகளைத் தாங்கும் சக்தி பெண்களிடம் அதிகம் உள்ளது. சூழ்நிலை மாறிக் கொண்டேயிருக்கிறது. அதற்கு ஏற்ப மாறிக் கொள்ளும் இயல்புள்ள’ உயிரினங்கள் தாம் நிலைத்திருக்க முடியும். மனித இனம் சம்பந்தப்பட்ட வரை, புதிய சூழ்நிலை