பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அம்சங்களைச் சேகரித்துக் கிரகித்துக் கொள்ளும் பணியை ஆண்பாலார் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்தப் புதிய அம்சங்களைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லும் பணி பெண்களைச் சேர்ந்தது.

இவ்வாறு புதுமையின் தாக்கல்களை உணரும் “Sensing” விதத்தில் ஆணின் உடல் அமைப்பு நாகுக்கானதாக மென்மையுடையதாக உள்ளது; இதில் எதிர்ப்படும் ஆபத்துக்களைத் தாங்கும் சக்தி அதற்கு இல்லை!

உதாரணமாக, பெண்ணின் தோலை அடுத்து அதிக கொழுப்புச் சக்தி படிந்திருப்பதால் குளிரைத் தாங்கும் ஆற்றல் ஆண்களைவிட அதிகம்.

இதே போல், மாரடைப்பு, புற்று நோய், மன நோய் போன்ற நவீன வியாதிகள் பெண்களைவிட ஆண்களையே அதிகமாக பீடிக்கின்றன. மற்றும் மனித இனத்தில் பொதுவாக ஏற்படும் மாறுதல்கள் முதலில் ஆண்களிடமே வெளிப்படுகின்றன. உதாரணமாக, பெண்களை விட ஆண்கள் உயரமாக இருக்கின்றனர். இதன் விளைவாக மனித இனம் முழுவதன் உயரம் அதிகரித்து வருகிறது.

சூழ்நிலையின் பாதிப்பைச் சமாளிக்கும் திறனை ஆண் பெற்றால் பெண்ணை விட அதிகக் காலம் அவன் ஜீவித்திருக்க முடியும். தர்க்க ரீ தியாகப்