பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ᏕᎯ7 இந்த நாட்டில் தான் இது முதலில் தோன்றியது என்று கூட வரலாற்றாசிரியர்களால் கூற முடிய வில்லை என்றால், இந்த நிலைமையை எப்படி விவரிப்பது? இதற்கென்று ஒரு வடிவம் தராத மருட்சி நிலையில் தான் இருக்கின்றார்கள். ஆனாலும், வரலாற்றாசிரியர்கள் தாங்கள் ஆராய்ந்த குறிப்புக்களின்படி ஒரு சில கருத்துக் களைக் கூறிச் சென்றிருக்கின்றார்கள் என்றாலும் ஒவ்வொருவர் கருத்தையும் நாம் உன்னிப்பாகப் பின் தொடரும் பொழுது, குழப்பங்களும் குதர்க்க நினைவுகளும் கூடவே வருவது தவிர்க்க இயலாத தாகவே இருக்கின்றன. ஒவ்வொருவர் கருத்தும், ஒவ்வொரு பக்கமாக நம்மை இட்டுச் செல்வதால், திக்குத் தெரியாத காட்டில் வழி தேடித் திரியும் புதுப் பயணிபோல, நாமும் புதிர்களுக்குள்ளே சதிடராத்தான் வேண்டி யிருக்கிறது. என்றாலும், வரலாற்றாசிரியர்கள் வழிகளில் சென்றாலும், நமக்குத் தேவையான முறைகளில் அந்த நீரோட்டத்திலிருந்து உரியவற்றை பக்குவ மாக எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு, சீட்டாட் டத்தின் தொடக்கத்தையும் தோற்றத்தையும் நாம் ஓரளவு தெரிந்து கொள்வோம். இது ஒரு அவசியமான முயற்சிதானா என் பவரும் உண்டு. அறிவார்ந்த ஒரு ஆட்டத்தின்