பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுடைய அன்புக்குரிய உடன் பிறப்பு - அவருடைய பாஷையிலே சொல்ல வேண்டுமேயானல் என்னுடைய சீடர் தென்னரசு அவர்களுடைய செல்வி இளவரசிக்கும், சிங்கப்பூர் கதிரேசன் அவர்கள் செல்வன் நாராயணனுக்கும் நம் அனைவருடைய நல்வாழ்த்துக்களோடு மணவிழா நிகழ்ச்சி, நிறைவேறியிருக்கிறது. -

1963 ஆம் ஆண்டு தென்னரசின் திருமணத்தை நான்தான் தலைமையேற்று நடத்திவைத்தேன். இன்று அவருடைய மகள் திருமணத்துக்கும் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறேன். அடுத்து அவருடைய பேத்தியின் திருமணத்திற்கும் தலைமை வகிக்க வேண்டும் என்று ஆசைதான்.

செல்வி இளவரசி என்னுடைய செல்விகளிலே ஒரு செல்வி. முரசொலியில் எமர்ஜென்சி காலத்தில் தணிக்கை அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக கரிகாலன் என்ற புனைப்பெயரிலே கேள்விக்கு பதில் எழுதும் முறையை மேற்கொண்ட போது, திருக்கோட்டி யூரில் இருந்து இளவரசி என்ற பெயரில் எனக்குப்பல கேள்விகள் வரும். நான் அவைகளுக்கு எல்லாம் பத்திரிகையில் பதில் எழுதுவேன். பிறகுதான் இந்த இளவரசி தென்னரசின் மகள் என்று தெரிந்தது. இப்படிப் பல கேள்விகளை என்னிடம் கேட்டுப் பதில்களைப் பெற்ற இளவரசி - திருமண விஷயத்தில் மட்டும் என்னிடம் கேள்வி கேட்கவில்லை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. -

நான்தான் உரிமையோடு சொல்ல முடியும். இது ஒரு காதல் திருமணம். இந்தக் காதல் திருமணத்தை நான் வரவேற். கிறேன்-பாராட்டுகிறேன்-வாழ்த்துகிறேன். கவிச் சக்கர வர்த்தி பாரதியார். -

127