பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு வருஷத்திற்குப் போராட்டமே இல்லை என்று சொல்லி விட்டாரே அதல்ை எங்களுக்குத்தான் சிரமம்' என்ருர் சூப்ரெண்டெண்ட். r

'அதற்கும் சிறைக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்கும் தோரணையில் அவரைப்பார்த்தேன். . 'இது மாதிரியான பைண்டிங் இலாகாவிற்கு கொஞ்சம் படித்தவர்கள்தான் தேவைப்படுவார்கள். உங்கள் ஆட்கள் வந்தால் கவர் கட்டிங், புக் பைண்டிங், பைல் ஒர்க் இவைகளைக் கொடுக்கலாம். இப்போது நூறு பேர் வந்து போனதால் நிறைய சர்க்கார் வேலை பார்க்க முடிந்தது.’’ என்ருர், சூப் ரெண்டெண்ட் எப்போதாவதுதான் எ ன் ே ைடு பேசுவார். அதுவும்இதுமாதிரி ப்யனுள்ள பேச்சைத்தான் பேசுவார். சிறை அதிகாரிகளில் இவர் மிகவும் உன்னதமான குணம்படைத்தவர். அவர் யாரையும் அடிக்க உத்தரவு கொடுக்கமாட்டார். எம். ஏ. படித்துவிட்டு ரிசர்வ் ஹெட் வார்டராக 1981-ல் உத்தியோ கத்தில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து சூப்ரெண்டெண்டாக வந்தவர். 1966-ல் அவர் ரிட்டையராக போவதாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள். பெயர் பால்ராஜ். அவரது குடும்பமே சர்க்காருக்குச் சேவை புரிகிறது. மகன் விமானப்படையில் பணி புரிகிருர், தம்பி இராணுவத்தில் சேவை செய்கிருர். இவர் தந்தை கலெக்டராக இருந்திருக்கிருர்.

1–6–65 * - தோழர் மாதவன் எம்.எல்.ஏ., பி. எஸ். மணியம் முதலா

ைேர் வந்தார்கள். எனது விடுதலைப்பற்றியும், பாராட்டுக் கூட்டங்கள் பற்றியும் கேட்டார்கள்.

ஜூன் 30-ல் எனக்கு விடுதலை என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. அதை அறிந்துகொண்டு போகத்தான் தோழர் மாதவன் வந்திருந்தார். அதிலிருந்து விடுதலை உணர்ச்சியே என்னிடம் மேலோங்கி இருந்தது. தொடர்ந்து பத்திரிகை களிலும் எனது விடுதலைத் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

8一6一65 - - --

தலைமைக் கழகத்திலிருந்து அமைப்புச் செயலாளர் N.W. நடராசன் அவர்கள் கடிதமெழுதியிருந்தார்கள். அதில் 30-6-65-ம் தேதிய எனது விடுதலை வரவேற்புக்கு அறிஞர் அண்ணு அவர்கள் வர இருப்பதாக அதில் எழுதியிருந்தார். நான் எதிர்பார்க்கவில்லை, அண்ணு அவர்கள் மலேசியா போகப்

66