உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அதைக் குறித்துப் பேசுகிறார், இது குறித்துப் பேசுகிறார்—என்று தமிழகம் இந்த அய்ம்பது ஆண்டுகளாகக் கூறிவருகிறது.

பெரியார் வாழ்வு முழுதும் உரிமைப் போரே

மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன்-எது நேரிடினும்—என்ற உரிமைப் போர் அவருடைய வாழ்வு. முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப் பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர் அந்த வெற்றியின் விளைவுகளை. இந்தத் தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியென்று பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அறிவுப் புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பாளர் பெரியார்! இந்த வெற்றி கிடைத்திட, அவர் ஆற்றிய தொண்டின் அளவு, மிகப்பெரியது.

பெரியார் கண்ட தமிழகம்

தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாது. பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்படும்போது வியர்த்துப் போகின்றனர். அப்படியா!— முடிகிறதா!—நடக்கிறதா!—விட்டுவைத்திருக்கிறார்களா!—என்று கேட்கிறார்கள்!— சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு.

அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இதுபோன்ற பல நகர்களில் என்னையும் உடன் அழைத்துக்கொண்டு பெரியார். சுற்றுப்பயணம் செய்தபோது, ஒவ்வொரு ஊரிலும் இது போலத்தான் கேட்டனர். யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவு வாதிகள்!

அந்த இடத்துப் பகுத்தறிவு வாதிகள் படிப்பார்கள்- பெரியபெரிய ஏடுகளை! எழுதுவார்கள் அழகழகான கட்-