பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9


டுரைகளை! கூடிப்பேசுவார்கள் சிறிய மண்டபங்களில், போலீசு பாதுகாப்புப் பெற்றுக்கொண்டு! இங்கு? பழமையின் பிடிவாதம் பொடிப்பொடியானது

  இங்கா! இவர் பேசாத நாள் உண்டா ? குரல் கேட் 

காத வர் உண்டா ? அவரிடம் சிக்கித்திண நாத பழமை' உண்டா ? எதைக் கண்டு அவர் திகைத்தார். எதற்கு அவர் பணிந்தார். எந்தப் புராணம் அவரிடம் தாக்கு தலைப் பெறாதது! 'ஏ! அப்பா ! 'ஒரே ஒருவர், அவர் நம்மை அச்சு. வேறு, ஆணி வேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே' என்று, இந்நாட்டை.. என்றென்றும் விடப் போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த 'பழமை' அல்றலாயிற்று! புதுப்புதுபொருள் கொடுத்தும், பூச்சு மெருகு கொடுத்தும் இன்று பழமையின் சில பகுதி கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.என் றாலும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக் கிறது என்பதனை அறியாதார். இல்லை !.

  எனவேதான்  பெரியாருடைய பெரும் பணியை, 

நான் ஒரு தனி மனிதனின் வரலாறு . என் றல்ல, ஒரு சகாப்தம்--ஒரு கால கட்டம்--ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை, -

  அக்கிரமம் தென்படும் போது, மிகப்பலருக்கு அது 

தன்னைத் தாக்காதபடி தடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக்கொள்வோம் என்ற பாது காப்பு உணர்ச்சியும்தான் தோன்றும்; எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை. நேர்மைக்காக பெரியார்.......

  பெரியார் அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டாலும்,  

எந்த வடிவிலே காணப்படினும், எத்துணை பக்க பலத் துடன் வந்திடினும் அதனை எதிர்த்துப் போரிட்த் தயங்குவதில்லை . -

  அவர் கண்... களம் பல; பெற்ற வெற்றிகள் பலப் 

பல! அவர் தொடுத்த போர் நடந்தபடி இருக்கிறது!