உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அவர் வயது 89; ஆனால், போர்க்களத்திலேதான் நிற்கின்றார்!

அந்தப் போரிலே ஒரு கட்டடத்தில் அவருடன் இருந்திடும் வாய்ப்பினைப் பெற்ற நாட்களைத்தான் 'வசந்தம்' என்றே குறிப்பிட்டேன்.

வாழ்க பெரியார்!

மேலும் பல ஆண்டுகள் அவர் நம்முடன், நமக்காக வாழ்ந்திருக்கவேண்டும், தமிழர் வாழ்வு நல்வாழ்வாக அமைவதற்கு, பன்னெடுங்காலமாக இருந்துவரும் கேடுகள் களையப்படுவதற்கு அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டுவரும் என்பதில் அய்யமில்லை.

வாழ்க பெரியார் !”

[தந்தை பெரியார் 89-ம் ஆண்டு பிறந்தநாள்
"விடுதலை" மலருக்கு எழுதிய கட்டுரை]




பெரியாரும் காந்தியும்

காந்தியார் பெரியாரின் மாளிகையிலே தங்கியிருந்திருக்கிறார். காந்தியின் நினைவாக தன் தமக்கையின் பெண்ணுக்கு 'காந்தி' என்றே பெயர் வைத்திருக்கிறார். காந்தியார் படத்தைக் கொளுத்துவேன்—அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்று பெரியார் சொன்னாரென்றால் அவர் சொல்லும் காரணம் என்ன என்பதை காங்கிரஸ்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

(11-11-57ல் தமிழக சட்ட மன்றத்தில்)