13
முழுவதும் களத்தில் நிற்கிற ஒரு மாபெரும் போராட்டமே நம்முன் காட்சியளிக்கிறது.
சுகபோகங்களைத் துறந்த நம் தந்தை
முதல் போராட்டம் அவர் உள்ளத்தில் தோன்றியிருக்க வேண்டும்......!செல்வக் குடியில் பிறந்தவர் அவர்! தன்னுடைய செல்வத்தை— செல்வாக்கைக் கொண்டு ஊரை அடக்கிப் போகபோக்கியத்தில் மிதந்து மகிழ்ந்திருக்கலாம், அப்போதிருந்த பலருங்கூட அப்படிப்பட்ட வாழ்க்கையில்தான் இருந்தார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையிலிருந்து தன்னைத் தனியாக்கிக் கொண்டு, தன்னைப் பிரித்துக்கொண்டு, 'என்னுடைய செல்வம் எனக்கில்லை; என்னுடைய செல்வத்தைக்கொண்டு போகபோக்கியத்தில் திளைக்கப் போவதில்லை; பொது வாழ்க்கையில் ஈடுபடப்போகிறேன்' என்று எண்ணிய நேரத்தில் அவர்களுக்கிருந்த செல்வமும், அவருடைய குடும்பத்திலிருக்கின்ற செல்வாக்கும் அதனால் அடையக்கூடிய சுகபோகங்களும், அவர்களுடைய மனத்தில் ஒரு கணம் நிழலாடியிருக்கவேண்டும். அப்போது உள்ளத்தில் நிச்சயமாக ஒரு போராட்டம் எழுந்து இருக்கவேண்டும். 'செல்வத்தில் புரளலாமா? அல்லது வறுமையில், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு என்னை நான் ஒப்படைப்பதா?' என்ற போரட்டத்தில், தொண்டு உள்ளத்தில் வெற்றியடைந்தார். 'செல்வத்திற்காக அல்ல நான்; சுகபோகத்திற்காக அல்ல நான், என்னிடத்தில் உள்ள அறிவு, உழைப்புத்திறன், என்னிடத்தில் அமைந்திருக்கிற பகுத்தறிவு அனைத்தும் தமிழக மக்களுக்குத்தேவை; தமிழகத்திற்குமட்டுமல்ல—முடிந்தால் இந்தியா முழுவதற்கும் தேவை; வசதிப்பட்டால் உலகத்திற்கே தேவை; வீட்டை மறப்பேன், செல்வததை மறப்பேன், செல்வம் தரும் சுகபோகங்களை மறப்பேன்' என்று துணிந்து நின்று அந்தப் போராட்டத்தில் முதன்முதலில் வெற்றி பெற்றார்.
இதில் பிரமாதம் என்ன இருக்கிறது என்று. எண்ணக்கூடும் செல்வம் இல்லாதவர்கள். செல்வம் உள்ள