உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பகுத்தறிவு மனப்பான்மையைத் தோற்றுவிப்பதற்காக ஒரு வால்டேர், ரூஸோ இப்படித் தொடர்ச்சியாகப் பலர் வந்து வந்து இரண்டு மூன்று நூற்றாண்டுகள் பாடுபட்டுத்தான் பகுத்தறிவுப் பாதையில் அந்த நாடுகள் செல்ல முடிந்தது. இப்படி இரண்டு நூற்றாண்டுகளில் செய்ய வேண்டிய காரியங்களைப் பெரியார் அவர்கள் இருபதே ஆண்டுகளில் செய்துமுடிக்க வேண்டுமெனக் கிளம்பினார்கள்; திட்டமிட்டார்கள்; அந்த திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றிக்கொண்டுவருகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்கள். "Putting centurico into capsules” என்று. சில மருந்துகளை உள்ளடக்கிச் சில மாத்திரைகளிலே தருவது போல, பல நூற்றாண்டுகளை இருபது ஆண்டுகளில் அடைத்து, அவர்கள் தம்முடைய வாழ்காளிலேயே சாதித்துத் தீரவேண்டுமென்று, வெற்றி பெற்றே தீரவேண்டுமென்று; அறிவோடும், உணர்ச்சியோடும், நெஞ்சு ஊக்கத்தோடும் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பதைக்கூட இரண்டாந்தரமாக வைத்துக்கொண்டு, எந்த அளவு முன்னேறுகிறோம் என்பதைக் காண்பதிலேயே அவர்கள் வாழ்க்கை முழுவதும் போராட்டக் களத்தில் நின்றிருக்கிறார்கள்.

பெரியார் போராட்டப்பாதையில் நான்

அந்தப் போராட்டக்களத்தில் அவர்கள் நின்றிருந்த நேரத்தில், சில பகுதிகளில் நான் உடனிருந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தமைக்காக, மகிழ்ச்சியடைகிறேன். நான் கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் முதலில் அவர்களிடத்தில்தான் சிக்கிக்கொண்டேன். நான் சிக்கிக்கொண்டது வாலிபப் பருவத்தில்...! எங்கெங்கோ போய்ச் சிக்கிக்கொண்டிருக்கவேண்டியவன், அவர்களிடத்தில்தான் முதன்முதலில் சிக்கிக்கொண்டேன். நான் காஞ்சிபுரத்தில் கல்லூரியில் படித்த படிப்பையும், அதன் மூலம் என்னென்ன எண்ணங்கள் ஏற்படுமோ, அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, ஈரோட்டில் போய்க் குடியேறினேன். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இதுபற்றி என்னுடைய பாட்டி-

2