பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19


19

எஞ்சினோடு பூட்டி, வெகு வேகமாக அதை இயக்க ஆரம்பித்தார். இதே திருச்சியில் புத்தூர் மைதானத் தில் திராவிடர் கழக மாநாடு ஒன்று நடைபெற்ற நேரத் தில்--நாளை காலை மாநாடு; இன்றிரவு மிகப்பெரிய மழை; அதனால், கொட்டகை முழுவதும் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. பெரியார் பார்த்து, அவருடைய தொண்டர்களை அழைத்து, இப்படி இருக்கிறதே, நாளைகாலை மாநாடு நடக்குமா ?' என்று கேட்டார்கள், அதற்கு அத்தொண் டர்கள் நடக்கும் என் றார்கள்; அப்படியே காலையில் நடந்தது. தண்ணீரிலா என்றால் இலலை; தொண்டர் களின் உழைப்பினால் தண்ணீர் இறைக்கப்பட்டு, மணல் தூவப்பட்டு, . காலையில் மாநாடு வெற்றி கரமாக , நடந்தது. இதை நான் சொல்வதற்குக் காரணம் முழங்கால் அளவுக்குச் சேறு இருந்த இடம் பக்குவப்படுத்தப்பட்ட மாதிரி தமிழகமக்களின் மனத்தில் ஊறிப்போயிருந்த சேற்றை அவர்கள் துடைத்தெறிந் தார்.கள்; தனது வாழ்நாளிலேயே அதை முடித்தார்கள்.

வடநாட்டினரை வியப்புறச்செய்த பெரியார்
20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களோடு நான் வட

நாட்டிற்குச் சென்றிருந்த நேரத்தில், வடநாட்டில் உள்ள பல தலைவர்கள், இந்தியப் பேரரசில் பெரிய உத்தியோ கத்தில் இருந்தவர்களெல்லாம் - பெரியாரைப் பார்த்து, "பெரியார் அவர்களே! உங்களை இன்னுமா விட்டு வைத்திருக்கிறார்கள் என்று கேட்டார்கள். அதற்குப் பெரியார் அவர்கள், “நான் என்ன தவறு செய்தேன் ? எதனால் எனக்கு ஆபத்து வரப்போகிறது?' என்று சொல்லிய நேரத்தில், 'நீங்கள் பேசுவதில் பத்தாயிரத் தில் ஒரு பகுதியை, நீங்கள் செய்வதில் ஆயிரத்தில் ஒரு பகுதியை நாங்கள் சொன்னாலும், செய்தாலும் எங்களை அடியோடு அழித்திருப்பார்கள். நீங்கள் எப்படித் தப்பிப் பிழைக்கிறீர்கள் ?" என்று சொன் னார்கள். அப்படிக் கூறும் அளவுக்கு வீரமிக்க காரியங் களை, வேறுயாரும் எண்ணிப்பார்க்க முடியாத காரியங் களை, நடத்திக் காட்ட முடியாத காரியங்களை