பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெரியோர் வாழ்விலே விருப்பமே இல்லை. அடிக்கடி அவள் ஏதாவது கற்பனை செய்துகொண்டிருப்பாள்; கனவு கண்டு கொண்டிருப்பாள். ஒரு நாள், அவள் வீட்டிலே உட்கார்ந்து *அல்ஜீப்ரா கணக்கு ஒன்றைப் போட ஆரம்பித் தாள். விடை சரியாக வரவில்லை. பல முறை. போட்டாள்; பயனில்லை. அவள் கவனம் முழுவதும் கணக்கிலே ஈடுபட்டிருந்தால்தானே விடை சரியாக வரும்? அதுதான் வேறு எங்கேயோ சென்று. விட்டதே ! சிறிது நேரம் சென்றது. திடீரென்று அவள் கிமிர்ந்து உட்கார்ந்தாள். மளமளவென்று ஏதோ சில வரிகளே ஆங்கிலத்தில் எழுதினுள். எழுதி விட்டுப் படித்துப் பார்த்தாள். படித்துப் பார்த். தாளா ? இல்லை, இல்லை கணக்குக்கு விடையாக இருந்தால், அவள் படித்துப் பார்த்தாள்’ என்று. சொல்லலாம். ஆனல், அவள் எழுதியது விடை யன்று; ஒரு கவிதை ஆகையால், அதை அவள் பாடிப் பார்த்தாள்’ என்றுதானே கூறவேண்டும் ? ஆம், அவள் பாடினுள்; உரக்கப் பாடினுள்; குதித்துக்கொண்டே பாடினுள். அவள் பிற்காலத் தில் உலகம் போற்றும் ஒரு சிறந்த கவியரசியாவ தற்குரிய அறிகுறி அச் சின்னஞ்சிறு பருவத்தி லேயே காணப்பட்டது. உலகம் போற்றும் கவியரசி என்று சொன்ன துமே, அவர் யார் ? என்று நீங்கள் கேட்கமாட் டீர்கள் என்பது எனக்குத் தெரியும். கவியரசி சரோஜனி தேவியைத் தவிர வேறு யாரை நாம் அப்படிச் சொல்லப்போகிருேம் !