பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணக்குப் போடாமல் கவிபாடியவர் 2.5 சரோஜனி தேவிக்கு வயது பதின்மூன்று இருக்கும். உடம்பு மிகவும் பலவீனமாக இருந்தது. "எழுதவோ படிக்கவோ கூடாது; முழுநேர ஒய்வு பெறவேண்டும்’ என்பது டாக்டர் உத்தரவு. சரோஜனிக்கு சும்மா இருக்க முடியவில்லை. அவர் எதையாவது படித்துக்கொண்டும், எழுதிக் கொண் டுமே இருப்பார். டாக்டர் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். சரோஜனியின் ஆர்வத்திற்கு அவரால் அனேபோட முடியவில்லை. சரோஜனியின் அப்பாவும் எவ்வளவோ கூறிப் பார்த்தார்; பயனில்லை. பள்ளிக்கூடம் போவ தைக்கூடச் சிறிது காலம் கிறுத்திவைத்தார். ஆனல், அதற்குப் பலன் இல்லாமல் போகவில்லை. சரோஜனி, வீட்டில் இருந்துகொண்டே ஒரு பெரிய கவிதையை எழுதிவிட்டார். 1300 வரிகள் கொண் டது அந்தக் கவிதை ஆறே நாட்களில் அதை இயற்றிவிட்டார் ! அத்துடன் ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார் ! அப்போது அவர் எழுதிய கவிதை, சர் வால்டர் ஸ்காட் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதுவதைப் போல் மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருந்ததென்று பலர் போற்றினர்; சரோஜனியைப் பாராட்டினர்.

  • * 42 .

蟒 纽 哈球 சரோஜனி தேவி உப்புச் சத்தியாக்கிரகத்திலும், சட்ட மறுப்பு இயக்கத்திலும் ஈடுபட்டுச் சிறை சென்றிருக்கிரு.ர். அப்போது அவர் ஏரவாடா சிறையில் இருந்தார். சிறையில் இருக்கும்போதே பல மலர்ச் செடிகளை அவர் பயிரிட்டு வளர்த்து வந்தார். . . . . . .