பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணக்குப் போடாமல் கவிபாடியவர் 2? அது ஒரு பெரிய மண்டபம். அங்கே கவியரசி மாலை 6 மணிக்குப் பேசப் போகிருர் என்பதை அறிந்து பெரிய கூட்டம் கூடிவிட்டது. எள் விழக்கூட இடமில்லை ! அச் சமயத்தில், மின்சாரத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு விட்டது. விளக்குகள் எரியவில்லை.மக்கள் முகத்தில் ஏமாற்றக் குறி படர்ந்தது. அப்போது சரோஜனி தேவியும் வந்து விட்டார். இருட்டாக இருப்பதைப் பற்றி அவர் கவலைப்பட வில்லை. நேராகச் சென்று மேடைமீது ஏறினர்; பேச ஆரம்பித்தார். ஆரம்பித்ததும், பளிச்’ சென்று விளக்குகள் எரிய ஆரம்பித்தன; இருள் விலகிவிட்டது. உடனே, சரோஜனி தேவி லேட், அலட் என்ற ஒர் ஆங்கிலப் பாடலை அபிநயத்துடன் பாட ஆரம் பித்தார். சமயத்திற்குப் பொருத்தமாயிருக்த அந்தப் பாடலைக் கேட்டு மக்கள் மகிழ்ச்சியடைக் தனர். -> co * * * 3 to & ot சரோஜனி தேவி ஒரு முறை சிறையிலிருந்து விடுதலை பெற்று அலகாபாத்துக்குச் சென்ருர். அவர் போய்ச் சேருவதற்கு முன்பே, அவருடைய பெட்டிகளும் பிற பொருள்களும் அங்கு வந்து தயாராகக் காத்திருந்தன. சரோஜனி எல்லாப் பெட்டிகளையும் பார்த்தார். "இவ்வளவு பெட்டிகள் எதற்கு? இந்தப் பெட்டி ஒன்றுமட்டும் இருந்தாலே போதும். மற்றவற்றை ஊருக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று அங்கிருந்தவர்களிடம் கூறினர். -