பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பெரியோர் வாழ்விலே தெறித்தது. பாவம், அந்தப் பையனுல் வலியைப் பொறுக்க முடியவில்லை. அவன் தைரியமான பையன்தான். ஆலுைம், பல்லேக் கடித்துக்கொண்டு எத்தனை நாளைக்குத் தான் இருக்க முடியும்? ஓடி ஆடி விளையாட முடியவில்லை; இரவில் கொஞ்ச நேரம்கூடத் துரங்க முடியவில்லை. எந்த நேரமும் வலி இருந்து கொண்டேயிருக்தது. - ஒருகாள், அந்த வீதியில் இருந்த பெரியவர் ஒரு வர் அந்தப் பையன் வீட்டுக்கு வந்தார். அவர் பையன் படும் துன்பத்தைக் கண்டார். 'சூடு போட்டால், இது குணமாகி விடும்” என்று அவர் உடனே அப்பையன், அம்மாவைப் பார்த்து 'அம்மா, தினந்தோறும் என்னுல் இப்படித் துன் பப்பட முடியாது. சூடு போட்டால் குணமாகிவிடும் என்கிருர்களே, சூடு போடம்மா’ என்று கெஞ்சி ஞன. 'ஐயையோ சூடுபோட்டால் சுகமாகவா இரு கும் ? அப்போது என்ன வலி வலிக்கும் வேண் டாம் கண்ணே, வேறு ஏதாவது மருந்து போட லாம்' என்ருள் அம்மா. போம்மா, தோன் எத்தனையோ மருந்துகள் போட்டுப் பார்த்துவிட்டாயே! இதற்குச் சூடுதான் போடவேண்டும். சூடு போடும்போது எவ்வளவு வலி இருந்தாலும் பரவாயில்லை. பிறகு, சுகமாக இருக்குமல்லவா ?” எ ன் று பிடிவாதமாகக் கூறிஞன்.