பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்தக் கையிலே சூடு போட்டுக் கொண்டவர் 3割 அம்மா இணங்கவில்லை. சரி, அம்மாவிடம் சொன்னுல் இப்படித்தான் யோசிப்பாள். நாமே இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று எண்ணினன், அவன். நேராக அந்த ஊரிலிருந்த ஒரு மருத்துவரிடம் சென்றன். அவரிடம் தன் துன்பத்தை எடுத் துரைத்துச் சூடு போடும்படி வேண்டினன். மருத்துவர் இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து நெருப்பிலே வைத்தார். அது நன்ருகக் காய்ந்தது. கறுப்புக் கம்பி சூடு ஏறிச் சிவப்புக் கம்பியாக மாறியது. அதைக் கையில் எடுத்தார் மருத்துவர்; பையனின் கைக்கு அருகில் கொண்டு போர்ை. அப்போது அவர் கைகள் நடுகடுங்கின. *இவனே சிறு பையன்; சூடு போட்டால் தாங்கு வானு துடிதுடித்து அலறுவானே !' என்று கினைத்தார். உடனே, அவர் தயங்கினர். பிறகு என்ன கினைத்தாரோ, காய வைத்த கம்பியைப் பேசாமல் கீழே போட்டுவிட்டார். இது அந்தப் பையனுக்கு ஏமாற்றமாக இருக் தது. உடனே அவன் அந்த மருத்துவரை எதுவுமே கேட்காமல், சட்டென்று கீழே குனிந்தான். "தக தக என்று ஒளி வீசிக்கொண்டு. கிடந்த கம்பியை எடுத்தான். எடுத்துத் தன் கையிலிருந்த சிலந்தியில் வைத்து அழுத்தினுன் உடனே, 'சடசட' என்ற சத்தம் வந்தது. சிலந்தியிலிருந்த கெட்ட காற்றமும் வெளியேறியது. பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும், ஐயை யோ!' என்று அலறினர். ஆனால்,அந்தப் பையனுே: