பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்தக் கையிலே சூடு போட்டுக்கொண்டவர் 33. ஒருங்ாள் படேல் கடை வீதியில் ஒரு கோட்டுப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வந்தார். அவர் வைத்திருந்த கோட்டை ஆசிரியர் பார்த்துவிட்டார். அதைப் பார்த்ததும் அது எங்கோ ஒரு கடையில் வாங்கப் பட்டிருக்கிறது என்பதை அவர் அறிந்துகொண் டார். உடனே அவர் படேலின் அருகிலே வந்தார். கோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். பிறகு, "அடே, ரீ இதை எங்கே வாங்கிய்ை?’ என்று கோபமாய்க் கேட்டார். - - - 'கடையிலே வாங்கினேன், ஐயா” என்று அமைதியாகப் பதிலளித்தார் படேல். "ஏன் கடையில் வாங்கிய்ை? என்னிடத்தில்தான் வாங்கவேண்டும் என்று கூறியிருக்கிறேனல்லவா? நீ சட்டத்தை மீறலாமா?” "சட்டமா! அது என்ன?” 'கான் உன் ஆசிரியர். என்னே எதிர்த்தா பேச கிருய்?’’ - 'நீங்கள் எங்கள் ஆசிரியர்தான். சந்தேகமில்லை. ஆல்ை, நாங்கள் உங்களிடம் பாடம் படிக்கத் தான் வருகிருேம்; வியாபாரம் செய்ய வரவில்லை’ 'அடே, அதிகப் பிரசங்கி போதும். கிறுத்து, இன்னுெரு தடவை இப்படிச் செய்தால், உடனே உன்னைப் பள்ளிக்கூடத்தை விட்டுத் துரத்தி விடுவேன்’ - 'அவ்வளவு சிரமம் உங்களுக்கு வேண்டாம், ஐயா. காளையிலிருந்து நானே இங்கு வருவதை