பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரியோர் வாழ்விலே நிறுத்திக் கொள்கிறேன்” என்று தலைநிமிர்ந்து கூறினுர், படேல். ஆசிரியர் அசந்து போய்விட்டார்: பேசாமல் இடத்தில் போய் உட்கார்ந்தார். மறுகாள், படேல் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. அவர் மட்டும் வராதிருந்தால் அந்த ஆசிரியர் கவலைப்பட்டிருக்கமாட்டார். ஆனல், அந்த வகுப்புப் பிள்ளைகளில் ஒருவர்கூட வர வில்லை! ஆம், எல்லோரும் படேல் செய்ததே கியாயம் என்று கருதி அவர் பக்கம் சேர்ந்து விட்டனர். - - இறுதியில், அந்த நகரிலுள்ள ஒரு பெரியவர் இந்த வழக்கில் தலையிடவேண்டி வந்தது. படேலை பும், அக்த ஆசிரியரையும் அவர் சமாதானப் படுத்திவைத்தார். ҫ, සෟ co o @炎 * * ஓர் ஆசிரியர் வீடு. அந்த வீட்டில் படேலும், அவருடன் சில சிறுவர்களும் தங்கியிருந்து படித்துவந்தனர். அவர்கள் படிப்பது,சாப்பிடுவது, துரங்குவது எல்லாம் அங்கேதான். மொத்தத்தில் அது ஒரு சிறு குருகுலம் போலவே விளங்கி வந்தது. படிப்பைப் பற்றிய செய்திகளை ஆசிரியர் கவனித்து வந்தார். சாப்பாடு பற்றிய விஷயங்களை அவருடைய மனைவி கவனித்து வந்தாள். எல்லோருக்கும் இரவில் துரங்கப் போவதற்கு முன்னுல் பால் கொடுப்பது வழக்கம். ஆசிரியரின்