பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பெரியோர் வாழ்விலே 1917-ஆம் ஆண்டு ஆமதாபாத் நகரில் பல இடங் களில் கொடிய பிளேக் நோய் பரவியது. பிளேக் கோய் என்ருல் யார்தான் பயப்படாமல் இருக்க முடியும்? வசதியுள்ளவர்கள் ககரைவிட்டு வெளி யூருக்கு ஒடிவிட்டனர். கோர்ட்டுகள், சர்க்கார் ஆபீஸ்கள் மூடப்பட்டன. அப்போது, படேல் நகர சுகாதாரக் குழுவின் தலைவராயிருக்தார். அவர் பிளேக் கோயை ஒழிக்கத் தீவிரமாகப் பாடுபட்டார். காலையிலும் மாலையிலும் சுகாதார அதிகாரிகளுடன் புறப்பட்டு ஒவ்வொரு வீடாகச் செல்வார். வீடு வீடாகச் செல்லும்போது ஒர் ஏழைக் குடும் பத்தைப் பார்க்க நேர்ந்தது. அக் குடும்பத்தில் இருந்த அனைவரிடமும் பிளேக் கோய் உண்டாவ தறகான அறிகுறிகள் காணப்பட்டன. அப்போதே தக்க மருந்து கொடுத்தால், கோய் வராமல் தடுத்துவிடலாம் என்று படேல் நினைத்தார். கினைத்தபடி காலையிலும், மாலையிலும் தாமே நேராகச் சென்று அக்குடும்பத்தாருக்கு மருந்து கொடுத்துவந்தார். துர் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒருவர்மட்டும் அக்குடும்பத்தில் இறந்துவிட்டார். மற்றவர்கள் படேலின் தீவிர முயற்சியால் உயிர் தப்பினர்.

இவ்வளவு தைரியமாக அவர் பிளேக் இருந்த இடங்களுக்குச் சென்ருரே, அது தொத்து கோயல் லவா? அவரையும் பிடித்துக்கொள்ளாதா?’ என்று தானே கேட்கிறீர்கள்?

ஆம், ஆம், அது தொத்து கோய்தான். படேலை பும் அது சும்மாவிடவில்லை. அவருக்கும் பிளேக் நோய் கண்டுவிட்டது!