பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பெரியோர் வாழ்விலே அவர் வகுப்பிலே வந்து உட்கார்ந்ததும், கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார். "அடே கரேந்திரா, எழுந்திரு” என்று கூறி விட்டு, முதல் நாள் நடந்த பூகோளப் பாடத்தில் ஒரு கேள்வி கேட்டார். . கரேந்திரன் உடனே எழுந்தான். கேட்ட கேள் விக்குச் சிறிதும் தயக்கமில்லாமல் விடை அளித் தான். அவன் கூறிய பதிலைக் கேட்டதும் ஆசிரியர், "அடே, என்னடா தப்பாக உளறுகிருய் ?’ என்று மிரட்டினர். "இல்லை ஐயா, சரியாகத்தான் சொல்லுகிறேன்” "என்ன சரியாகத்தான் சொல்லுகிருயா ? அப் படியால்ை, என்னை முட்டாள் என்கிருயா ?” 'இல்லை ஐயா. நான் சொன்ன விடை சரியானது தான்” 'தவருன விடையைக் கூறிவிட்டு எதிர்த்து வேரு பேசுகிருய் மடையா” என்று கோபமாய்க் கூறிக்கொண்டே அவர் எழுந்து வந்தார். பிரம்பினுல் கரேந்திரனே அடிக்க ஆரம்பித்து விட்டார். அவர் என்னதான் அடித்தாலும் நரேந்திரன், தான் சொல்வதே சரி என்று அழுத்தக் திருத்த மாகக் கூறினன். திரும்பத் திரும்பச் சொன்ன தையே அவன் சொல்லி வந்ததால் அவருடைய கோபம் அதிகமாகிவிட்டது. கோபம் அதிகமாகி விட்டால்தான் தலைகால் தெரியாதே ஆத்திரத்தில் அவர் நரேந்திரனை அடி அடியென்று கன்ருக அடித்துவிட்டார்.