பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翰翰 பெரியோர் வாழ்விலே துழையும் போதே உடற்பயிற்சி ஆசிரியர் எதிரே கிற்பார். அவர் சொல்லிக் கொடுக்கும் பயிற்சி களைத் தாகூர் செய்து முடிப்பார். அதற்குள், சித்திரம் சொல்லிக் கொடுக்கும் உபாத்தியாயர் வந்துவிடுவார். அவர் சித்திரம் போடச் சொல்லிக் கொடுப்பார். அவர் போனதும், ஆங்கிலப் பாடம் கற்றுக்கொடுக்க ஒர் ஆசிரியர் வருவார். ஆங்கிலப் பாடம் ஆரம்பமாகி விடும். ஆல்ை, அப்போது தாகூருக்குப் படிப்பில் கவனம் செல்லாது. தூக்கம் கண்ணேச் சுற்றும். வாய் கொட்டாவி விடும். தாகூர் ஆங்கிலப் பாடம் படிக்கும்போது ஸ்தீன் என்ற வேறு ஒரு பையனும் அவருடன் படித்து வந்தான். அவன் துரங்கமாட்டான். தூக்கம் வந்தாலும், கண்களில் சிறிது மூக்குப் பொடியைப் போட்டுக் கொள்வான். ஆனல், தாகூர் அப்படி யெல்லாம் செய்யமாட்டார். பேசாமல் அங்கேயே படுத்துத் தூங்கிவிடுவார். ஒயாது, ஒழியாது பாடம் சொல்லிக் கொடுத்து வந்ததால், தாகூருக்குப் படிப்பில் மனம் செல்ல வில்லை. அதனுல்தான், அந்தக் காலத்தில் பள்ளிப் படிப்பு என்ருல் தாகூருக்குப் பாகற்காயாகத் தோன்றியது. தாகூரின் அண்ணுவுக்குக் குதிரைச் சவாரி செய்வதில் அளவில்லாத பிரியம். அவருடைய மனைவிக்கும் குதிரைச் சவாரி செய்யத் தெரியும். அண்ணி குதிரைமேல் ஏறிச் செல்வதைப் பார்க் கும் போதெல்லாம், அண்ணிகூடக் குதிரைச்