பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哈2 பெரியோர் வாழ்விலே “இந்தப் பூக்களை கன்ருகப் பிழியவேண்டும். உடனே அவற்றிலிருந்து சாறு வரும். அந்தச் சாற்றில் கமது கட்டைப் பேணுவைத் தோய்த்து, அழகாகப் பாடல்கள் எழுத வேண்டும்’ என்று கினைத்தார். - கினைத்ததுபோல் செய்ய முயன்ருர். சில பூக் களை எடுத்துக் கசக்கினர். பலங்கொண்ட மட்டும் பல்லேக் கடித்துக்கொண்டு பிழிந்து பார்த்தார். ஆணுல், ஒரு சொட்டுச் சாறுகூட வெளிவரவில்லை. உடனே, அவர் சாற்றைப் பிழிக்தெடுக்க ஓர் இயக்திரம் செய்யவேண்டுமென நினைத்தார். அண்ணுவிடம் சொன்னர். அண்ணு அதை ஒர் விண் ஆசை என்று நினைத்தார். இருந்தாலும், அருமைத் தம்பியின் மனம் கோக அவர் விரும்ப வில்லை. உடனே தச்சனுக்கு ஆள் அனுப்பினர். தச்சன் வந்தான். தாகூர் அவனிடம், 'ஐயா, ஒரு மரக்கோப்பையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு குழவியை வைத்து அந்தக் குழவியை ஒரு சக்கரத்துடன் மாட்டிவிடுங்கள். சக்கரம் சுற்றும்போது குழவியும் சுற்றுமல்லவா ? அப்போது, கோப்பைக்குள் இந்தப் பூக்களை நான் கொட்டுவேன். உடனே சாறு வரும். அந்தச் சாற்றில் என் பேணுவைத் தோய்த்துப் பாட்டு எழுதுவேன். என்ன புரிந்ததா ?’ என்ருர், தாகூர் சொன்னபடியே இயந்திரம் தயாராகி விட்டது. உடனே, தாகூர் ஆவலுடன் பூக்களை உள்ளே கொட்டிச் சக்கரத்தைச் சுற்றிப்பார்த்தார். எவ்வளவுதான் சுற்றியும், ஒரு சொட்டுச் சாறும் கிடைக்கவில்லை. .