உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பெரியபுராண ஆராய்ச்சி 22. 23. 24, 25. 26, 28. 29, 30. 31 காரைக்கால் அம்மையார் - வணிகர் - காரைக்கால் (சோ - பேய் வடிவம் கொண்டவர் (1) மூத்ததிருப்பதிகம் 2 இரட்டை மணி மாலை (3) அற்புதத் திருவந்தாதி முதலியன பாடியவர் 11ஆம் திருமுறை: சம்பந்தரால் பாடப்பட்டவர் - கி.பி. 400-600 குங்குலியக் கலயர் - பிராமணர் - திருக்கடவூர் சோ - தாலி விற்றுக் குங்குலியப்பணி செய்தவர் சிவனால் அளப்பருஞ் செல்வம் பெற்றவர் திருப்பனந்தாளில் சாய்ந்திருந்த லிங்கத்தைத் தாமே இழுத்து நிறுத்தியவர்: சோழன் மதிப்பைப் பெற்றவர்; சம்பந்தர்க்கு விருந்தளித்தவர் - கி.பி. 600-660. குலச் சிறைார் - மரபு கூறப்படவில்லை - மண மேற்குடி (பா - அடியாரை ஆதரித்தவர். பாண்டியன் மந்திரி சம்பந்தரை வரவழைத்துப் பாண்டியனைச் சைவர் ஆக்கினவர் - கி.பி. 640-680 கூற்றுவ நாயனார் - அரசர் - களந்தை சோ - பல அரசர் நாடுகளைக் கவர்ந்து ஆண்டவர் பஞ்சாட்சரம் உச்சரித்தவர்; இறைவனால் முடி சூடப் பெற்றவர் முடிசூட மறுத்த தீட்சிதர் அஞ்சிச் சேர நாடு சென்றனர் - களப்பிரர் காலம் - கி.பி. 400-600. கோச்செங்கட்சோழர் - சோழ அரசர் - சிதம்பரம் (சோ - சிவனருள் பெற்றவர் பேரரசர் கோவில்கள் கட்டியவர் தீட்சிதர்க்கு மாளிகைகள் கட்டியவர்; அப்பர் - சம்பந்தராற் பாடப்பட்டவர் - கி.பி. 400-600 கோட்புலி நாயனார் - வேளாளர்; சோழர் சேனாதிபதி - திரு நாட்டியத்தான் குடி சோ - சிவனடியார்க்கென வைத்திருந்த நெல்லை உறவினர் காவலில் விட்டுப் பகைவரோடு போராடச் சென்றார்; உறவினர் நெல்லைத் தின்றுவிட்டனர்; அவர் அனைவரையும் நாயனார் கொன்றார்; அவர் புதல்வியரைச் சுந்தரர் புதல்வியாக ஏற்றார் - சுந்தரர் காலத்தவர்; கி.பி. 840-865 சடைய நாயனார் - ஆதிசைவர் - திருநாவலூர் ந - சுந்தரர் தகப்பனார்- கி.பி. 840-865 சண்டேசுவரர் - பிராமணர் - திருச்சேய்ஞலூர் சோ - மணல் லிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்தவர் தந்தை காலை வெட்டியவர் அப்பர் சம்பந்தரால் புகழப்பட்டவர் - கி.பி. 400-600 சத்தி நாயனார் - வேளாளர் - விரிஞ்சியூர் (சோ) - சிவனடியாரை இகழ்பவரை நாவறுத்தவர் - கி.பி. 600-840. சாக்கிய நாயனார் - வேளாளர் - சங்கமங்கை (சோ - காஞ்சி சென்று பல சமயங்களை ஆராய்ந்தவர் பெளத்த வேடத்துடன் சிவலிங்க வழிபாடு செய்தவர் கல்லெறிந்து வழிபட்டவர்-கி.பி. 400-600